"கோயிலா இல்லை குளமா!" - அழகர் கோயிலை மூழ்கடித்த மழைநீர்
மதுரை மாவட்டம் அழகர் கோவில் பகுதியில், அடிவாரத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்பண சாமி கோயில் வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலூர் மற்றும் அழகர்கோவில் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், அடிவாரப் பகுதியில் உள்ள தெப்பத்திற்கு செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டதால், கோயில் வளாக பகுதியில் மழைநீர் தேங்கியது. தற்போது வடிகால் பாதை சரிசெய்யப்பட்டு, சீராக உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story