தூங்கா நகரில் இப்படி ஒரு சம்பவமா? - போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

x

மதுரையில் நீதிபதி வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டபோது தப்பியோடிய விசாரணை கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் உள்ளிட்ட 2 பேர் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டனர். நீதிமன்றம் விடுமுறை என்பாதல்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரேயுள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தவதற்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது தீபன்ராஜ் போலீசார் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தப்பியோடினார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீபன்ராஜை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்