கலாமின் கனவு; விவேக்கின் லட்சியம்... 1 லட்சம் மரங்கள்... அமேசான் காடாகும் மதுரை... பாடுபடும் இளைஞர்

x

மதுரையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படும் இளைஞரை குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறிய வழியில் பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மறைந்த நடிகர் விவேக் மட்டுமன்றி அவரைத் தொடர்ந்து பலரும் இயற்கையை காக்கும் முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அப்துல் கலாம் வழியிலேயே சேவையாற்றி வருகிறார் மதுரையை சேர்ந்த குபேந்திரன்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த கட்டிட பொறியாளர் குபேந்திரன்.. 38 வயதான இவர், கடந்த 12 வருடங்களாக சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மரக்கன்றுகளை நடும் பணிகளை செய்து வருகிறார்...

மதுரையில் பள்ளிகள், சுபநிகழ்ச்சிகளில் மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்க்க ஊக்கமளித்து வருகிறார்..

தொடக்கத்தில் அவரது குடும்பத்தார் ஆதரவாக இல்லாத போதிலும், மரம் வளர்ப்பதை அவர் கைவிடவில்லை.


Next Story

மேலும் செய்திகள்