32 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள்..! ஐ.ஜிக்களுக்கு அபராதம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில் பிடிவாரண்ட் அமல்படுத்தாததால், 5 கியூ பிரிவு ஐஜி-க்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடா சட்டத்தின் கீழ் 1991-ல் பதியப்பட்ட வழக்குகள், கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தாமல் உள்ள நிலையில், போலீசார் தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, டிஜிபி உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறியதுடன், 5 ஐஜி-க்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். வரும் நவம்பர் 29-ம் தேதிக்குள் சட்டப்பணிகள் ஆணை குழுவில் டெபாசிட் செய்ய வேண்டும் என நிதீபதி உத்தரவிட்டுள்ளார்.
Next Story