4 வார காலக்கெடு.. மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பட்டியலின, பழங்குடியின மக்களின் கல்வி, வேலை, குடியிருப்பு, சாலை வசதிகள், மின் இணைப்பு, குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு, மாநில அரசுக்கு சிறப்பு நிதியை வழங்கி வருகிறது. கடந்த 2019 ம் ஆண்டு முதல் இந்த சிறப்பு நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை என்றும், சில திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மாநில அரசு முறையாக பட்டியலின மக்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்குவதில்லை எனவும் ராஜகுரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சிறப்பு நிதி கிடைக்காமல், பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு, 4 வாரங்களில் மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்