உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் வேதனை

x

குளங்களில் மீன் வளர்க்க கோழிக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் கவலை தெரிவித்திருக்கும் உயர்நீதிமன்றம், தஞ்சையில் நீர்நிலைகளில் தரம் மாசுப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கும்பகோணம் உடையலூர் கிராமத்தில் அரசு குளங்களில் மீன் வளர்க்க விதிகளை மீறி விடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, இயற்கையான முறையில் பெருகியிருக்கும் மீன்களை பிடிக்க ஏலம் விடப்படுகிறது, ஆனால் அதை செய்யாமல் வணக நோக்கில் வேதியல் பொருட்களை கலந்து மீன்களை பெருக்குகிறார்கள் என நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. குப்பை மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது, நீரின் தரம் மாறுகிறது, பல ஆண்டுகளாக குடிநீராக பயன்படுத்தப்பட்ட குளத்துநீரை இப்போது கால்நடைகள் கூட குடிக்க முடியாமல் போய்விட்டது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இதனையடுத்து தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளில் தரம் மாசுப்பட்டுள்ளதா? கழிவுநீர் குப்பை கொட்டப்பட்டுள்ளதா? நீர் நிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள், மீன் வளத்துறை அதிகாரிகள், விசாயதுறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்