``சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளிலும் மது விற்க அனுமதிக்க..'' - ஐகோர்ட்டில் அதிரவிட்ட ஐடி ஊழியர்

x

சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளிலும் மது விற்க அனுமதிக்க..'' - சென்னை ஐகோர்ட்டில் அதிரவிட்ட ஐடி ஊழியர்

சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகளிலும் மது விற்பனை மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டாஸ்மாக்குக்கு மது சப்ளை செய்யும் நிறுவனங்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சில பிராண்ட்கள் மட்டும் டாஸ்மாக் நிர்வாகம் விற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்-கில் ஊழல் நிலவுவதாகவும், தமிழகத்தில் விற்கப்படும் மது வகைகளின் தரத்தை விட, வெளிமாநிலங்களில் தரம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளை வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்