கோ வாரண்டோ மனுவுக்கு எதிராக சுகாதாரத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு
தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டா் ஜெ.சங்குமணி நியமிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கோ வாரண்டோ மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக சுகாதாரத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் மாரி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக பணியாற்றிய சங்குமணி, கூடுதல் விலைக்கு உபகரணங்கள் வாங்கியதாக புகார் எழுந்ததாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவக்கல்லூரி இயக்குனராக செயல்பட சங்குமணிக்கு தகுதியில்லை என அறிவித்து, அவர் செயல்பட தடை விதிப்பதோடு, அவரை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் மற்றும் சங்குமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்தார்.v