இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர் நீதிமன்றம்
கடந்த 2002 முதல் 2007 வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கும், 2009-10ம் நிதியாண்டுக்கும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், வருமான வரியாக 7 கோடியே 57 லட்சம் ரூபாய் செலுத்தகோரி நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை வருமான வரித் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் 2015ம் ஆண்டு ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மனுதாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே. சூர்யா, இந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.