வயிறு வலியோடு வந்த பெண்ணை பார்த்ததும் `அசிங்கத்தை' கண்டுபிடித்த டாக்டர்.. காதலன், காதலி, நண்பன் கைது

x

கேரளாவில் பிறந்த பச்சிளம் குழந்தையை மண்ணுக்குள் புதைத்தது தொடர்பாக காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வயிற்று வலி என்று கூறி ஒரு இளம்பெண்

குழந்தை பிரசவித்ததற்கான அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பச்சிளம் குழந்தையை அரசு காப்பகத்தில் ஒப்படைத்ததாக அப்பெண் கூறியதால் சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில்

அதிர்ச்சி தகவல் வெளியானது.

கல்லூரியில் படித்த போது காதலித்த தாமஸ் ஜோசப் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் நெருங்கி பழகியதால் குழந்தை பிறந்ததாகஅப்பெண் தெரிவித்துள்ளார். தாமஸ் ஜோசப் நண்பருடன் சேர்ந்து பச்சிளம் குழந்தையை மண்ணுக்குள் புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிய போலீசார்,

காதல் ஜோடி மற்றும் நண்பரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்