சென்னையில் இருந்து லீவுக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சிறுவன். பார்த்து ரசித்த 25 வயது காதலன்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண், 25 வயது இளைஞருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் பணிபுரியும் அந்த பெண் விடுமுறைக்காக ஊருக்கு சென்றுள்ள நிலையில், தனியாக சந்தித்து பேச ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளைஞர் அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு சென்ற இளம்பெண்ணை இளைஞரின் நண்பர்கள், 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், சிறுவன் உட்பட 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story