ஓடிப்போய் திருமணம் செய்த காதலர்கள்..பெண் வீட்டார்களின் செயலால் அவமானத்தில் உயிர்விட்ட பையனின் தாய்

x

ஓடிப்போய் திருமணம் செய்த காதலர்கள்.. பெண் வீட்டார்கள் செய்த செயலால் அவமானத்தில் உயிரைவிட்ட பையனின் தாய்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காதல் திருமண விவகாரத்தில், பெண் வீட்டார் தாக்கியதால், மன உளைச்சலில் இருந்த இளைஞர் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருப்பண்ண மேடு பகுதியை சேர்ந்த காதலர்கள் ஹரிபிரசாத் மற்றும் மனோரஞ்சனி. ஒரே சமூகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 5ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு, திருப்பூர் சென்றனர். இந்நிலையில், ஹரிபிரசாத்தின் குடும்பத்தினரிடம் பெண் வீட்டார் தொடர்ந்து தகராறு செய்துள்ளனர். கடந்த 13ஆம் தேதி ஹரிபிரசாத்தின் தாயார் மல்லிகாவை, பெண் வீட்டார் துடப்பத்தை வைத்து தாக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரிபிரசாத்தின் தாயார் மல்லிகா, நேற்று(ஜுன் 14) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்ககோரி, மல்லிகாவின் உறவினர்கள் குளித்தலை காவல்நிலையத்தில், கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்