காதலியின் ஆசையையும் நிறைவேற்றி பெரியார் சிலை முன்பும் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள்
சேலத்தில் இளைஞர் ஒருவர் காதலியின் விருப்பத்தின்படி இந்து முறையிலும், தனது கொள்கையின் படி சுயமரியாதை திருமணமும் செய்து கொண்டார். அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர், தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவக்கும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் விருப்பத்தின் படி கோயிலில் திருமணம் நடந்தது. தொடர்ந்து, பெரியார் கொள்கையாளரான தினேஷின் விருப்படி, இருவரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, ஒருவருக்கொருவர் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
Next Story