நூதன திருட்டில் பல லட்சம் கொள்ளை...ஜாக்பாட்ஆசை காட்டி நாமம் போடும் கும்பல்...
திருப்பத்தூர் - ஆம்பூர்
நூதன திருட்டில் பல லட்சம் கொள்ளை...
ஜாக்பாட்ஆசை காட்டி நாமம் போடும் கும்பல்...
600 கட்டினால் பலாயிரம், 3000 கொடுத்தால் பல லட்சம்...
கூலி தொழிலாளர்களை குறிவைத்து மோசடி...
வாட்ஸ் ஆப் விளம்பரம் மூலம் பல லட்சம் மோசடி...
கட்டிய பணத்திற்கு ஆப்பு வைத்த மொபைல் ஆப்...
சேலம்
பம்பர் பரிசாக விழுந்த சொகுசு கார் !
7 லட்சம் ரூபாய் சுருட்டியே கேடிகள்...
சேலம்
கார் பரிசு விழுந்திருபதாகச் சொல்லி 7 லட்சம் மோசடி...
இல்லாத காருக்கு இன்சுரன்ஸ், சாலை வரிகட்டிய பெண்மணி
பேட்டி : நாகராஜன்
ஆம்பூர்
கையில் இருக்கும் பணத்தை எதிலாவது முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் , அனைத்து தரப்பு மக்களிடம் அதிகரித்திருக்கிறது.
ஆனால் எங்கு எபோது எதில் முதலீடு செய்யவது என்று தெரியாத , நடுத்தர மக்களை , ஆருத்ரா மதிரியான மோசடி நிறுவனங்களை கோழிக் குஞ்சு போல
அமுக்கி, மொத்த பணத்திற்கும் பட்டை நாமம் போடுவது தொடர்கதையாக இருந்து வருக்கிறது.
பிரமாண்ட்ட கட்டிடங்கள், நூற்றுகனக்கான பணியாளர்கள் என ஏக்கச்சக்கமான முதலீடுகளை போட்டுத்தான் இந்த நிறுவணங்கள்
கொள்ளை அடிக்கிறது என்றால், இது எதுவுமே இல்லாமல் ஒரு மொபைல் ஆப்பை மட்டுமே வைத்துக்கொண்டு பல லட்சங்களை சுருட்டி விடுகிறது சில ஆன்லைன் கும்பல்கள்.
அப்படி ஒரு மொபைல் ஆப்பால் பணத்தை இழந்தவர்கள் தான் இங்கு காவல் நிலையத்தில் குவிந்திருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சுற்றி உள்ள கிராம பகுதிகளில்
சமீபகாலமாக ஒரு மொப்பைல் ஆப் பற்றிய குறுஞ்செய்திகள் பரவலாக வலம் வந்து கொண்டு இருந்தது.
Crossword என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த அந்த செயலி, பண்ணாட்டு நிறுவணத்துக்குச் சொந்தமானது எனவும் , குறைந்த பணத்தை முதலீட்டில் அதிகலாபம் கொடுக்கும் அற்புத விளக்கு என்றும்
விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். 600 ரூபாய் போட்டால் ஒரு சில நாட்களிம் அது பல ஆயிரங்களாக திரும்பவரும், அதே சமயம் 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் போட்டா பல லட்சங்கள் ரிட்டன்ஸ் கிடைக்கும் என கவர்ச்சியான விளம்பரங்கள் பல வாட்ஸாப் குரூப்புகளில் ஃபார்வட் மெசேஜாக வலம் வரத்தொடங்கவே, இதனை பார்த்த மக்கள் ஆரம்பத்தில் குறைவான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இதையடுத்து அவர்களுக்கு சொன்னபடியே வட்டியும் முதலுமாக ரிட்டன் பணம் வங்கிக் கண்க்கிற்கு வந்திருக்கிறது.
பணம் கிரிட்டிட் ஆனதும் அந்த ஆப்பின் மீது முதலீட்டாளர்களுக்கு முழு நம்பிக்கை வந்திருக்கிறது. இதனையடுத்து தங்களுக்கு தெரிந்தவர்களை அதில் இனைத்துவிட, சங்கிலி தொடராக அடுத்தடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்.
அந்த செயலியில் பணத்தை வாரி இரைத்திருக்கிறார்கள். பணம் திரும்ப கிடைத்த சிலர் முன்பை விட அதிக பணத்தை முதலீடாக போட்டிருக்கிறார்கள்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அந்த ஆப் மொத்தமும் ஷட்டவுன் ஆகிவிட்டது. பணத்தை போட்டுவிட்டு வித்ட்ராலுக்காக காத்திருந்தவர்கள் பதறி போயிருக்கிறார்கள். எதாவது டெக்னிகல் பிரச்சனையாக இருக்குமென சில நாட்கள் காத்திருந்திருக்கிறார்கள்.
ஆனால் எந்த பயனுமில்லை.
மோசடிகும்பல் மொத்தமாக கடையை சாத்திவிட்டதை அறித்தவர்கள், தங்கள் பணத்தை மீட்டுத்தர வேன்டுமென காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
ஆம்பூரில் முதலீடு எனச் சொல்லி, பலரிடம் லட்சங்களை சுருட்டி இருக்கிறார்கள் என்றால் , மற்றொரு சம்பவத்தில் ஒரே பெண்ணிடம் 7 லட்சத்திற்கும் மேல் அபோஸ் செய்திருக்கிறது ஒரு வாட்ஸாப் கால் கும்பல்.