பெற்றோரை இழந்து; வீடும் இடிந்து... நிர்கதியாய் நின்ற குழந்தைகள் -உதவிக்கரம் நீட்டிய தாசில்தார்

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தார்பட்டி கிராமத்தில், ஒரு தங்கை மற்றும் 2 தம்பிகளுடன் ஒச்சம்மாள் என்ற இளம்பெண் வசித்து வருகிறார். பெற்றோரை இழந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக , நால்வரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஒச்சம்மாளின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனையறிந்த சாத்தூர் தாசில்தார் லோகநாதன், தனது சொந்த செலவில் ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் அரிசி, பருப்பு வழங்கினர். மேலும் தமிழக அரசின் எட்டாயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகையும் வழங்கிய அவர், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் சிறப்பு நிதிக்கும் மாவட்ட ஆட்சியர் மூலம் பரிந்துரை செய்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்