"புதிய கட்டிடங்களுக்கு ஆபத்து.. தயவு செய்து கேளுங்க.." - மணல் லாரி சங்க மாநில தலைவர்

x

தமிழ்நாட்டில் 90 சதவீத எம்.சாண்ட் தரமில்லாமல் விநியோகம் செய்யப்படுவதாக மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசு அறிவித்தபடி 26 மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் 90 சதவீதம் எம்.சாண்ட் தரமில்லாமல் விநியோகம் செய்யப்படுவதாகவும், மத்திய- மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டத்துக்காவது ஆற்று மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்