பிரபல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நள்ளிரவில்.. ஆழ்ந்த தூக்கத்தில் ஏர் ஹோஸ்டஸை சீரழித்த ராட்சத உருவம்

x

ஹித்ரோ நகரில் உள்ள ரெட்டிசன் ரெட் ஹோட்டலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வியாழக்கிழமை இரவு 1.30 மணிக்கு விமான பெண் ஊழியர் தங்கியிருந்த அறைக்குள் திடீரென மர்மநபர் ஒருவர் நுழைந்தார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான பெண் ஊழியர் தன்னை காப்பாற்றுமாறு அலறி துடித்தார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு வந்த விமான ஊழியர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள், தப்பியோட முயன்ற நைஜிரிய நபரை மடக்கி பிடித்து லண்டன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த விமான பெண் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ள ஏர் இந்தியா நிறுவனம், விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முன்னுரிமை அளித்து வருவதாக விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்