பரவும் மக்களவை தேர்தல் காய்ச்சல் - பரபரப்பாக நடக்கும் வேலைகள் - அதிகாரி சொன்னமுக்கிய தகவல்
சென்னை தலைமைச்செயலகத்தில் மக்களவை தேர்தல் பணி குறித்து சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, தமிழகம் முழுவதும் 176 வாக்கு சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளதாகவும், இதனால் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 320 ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் வருகிற 25ஆம் தேதி வரை 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு வீடு வீடாகச் சென்று நடத்துவதோடு, படிவம் 12டி வழங்கப்படும் என்றார். ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும் என தெரிவித்த சத்ய பிரதா சாகு, சுமார் 4 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story