"பாஜக ஆட்சிக்கு வந்தால் இதான் நடக்கும்" - திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

x

பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல் தடுத்து, இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பெண்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என திமுக கேட்டுக்கொண்டுள்ளது.

அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி வழங்கிய இட ஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டு நிர்வாக ஆளுமையில், 38 மாவட்டங்களில் 16 மாவட்ட ஆட்சியர் பெண்கள் என்று கூறப்பட்டுள்ளது. மறைந்த தலைவர் கருணாநிதி காலத்தில் கொண்டு வந்த மகளிர் நலத்திட்டங்கள் மற்றும் இடஒதுக்கீடு மூலம் பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் இட ஒதுக்கீடு தத்துவத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதால், மீண்டும் பாஜக வந்தால், வளர்ச்சி, முடக்கப்படும், பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விழிப்புடன் இருந்து பெண்கள், இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று திமுக கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்