தேர்தல் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் உரிய ஆவணம் இல்லாமல் வந்த 1 கோடி

x

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் தனியார் நகைக்கடை, துணிக்கடைகளில் விற்பனையான பணத்தை எடுத்து சென்று வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக எடுத்து செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரிய ஆவணங்களைக் காண்பித்த பிறகு ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் பூந்தமல்லியில் 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்