"கிழித்தெறிய பார்த்தால்.." மேடையில் ஆவேசம்... ராகுல் காந்தி எச்சரிக்கை
ஒடிசா மாநிலம் போலங்கிரில் பிரசாரம் செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாஜக இந்திய அரசியல் சாசனத்தை அழித்து, இட ஒதுக்கீட்டை ஒழிக்க நினைக்கிறது என குற்றம் சாட்டினார். அரசியல் சாசன புத்தகத்தை வைத்து.. இந்த புத்தகத்தை எந்த சக்தியாலும் தொட முடியாது என்ற ராகுல் காந்தி, இந்திய அரசியல் சாசனத்தை கிழித்தெறிய பார்த்தால் காங்கிரஸ் என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என எச்சரித்தார். இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவந்து பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மையமாக்கி, அவைகளை 22 முதலாளிகளை கொண்டு பாஜக நிர்வகிக்கும் எனவும் விமர்சித்தார். நாட்டில் மக்கள் ஆட்சி அமைய வேண்டியது அவசியம் என்ற அவர், இட ஒதுக்கீட்டையும், அரசியல் சாசனத்தையும் காக்க காங்கிரசுக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்
Next Story