தமிழகத்தில் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல்? ஜூன் 4 சாதகமானால்.. சூடுபிடிக்கும் களம்

x

கடந்த 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கும் 2021ல் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது... இந்த 2 தேர்தல்களுக்கும் இடைப்பட்ட காலம் 21 மாதங்கள்... இந்த வித்தியாசத்தை மாற்றி சீராக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமானால் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் டிசம்பரில் முடிந்ததும் தனி அதிகாரியை நியமித்து உள்ளாட்சி அமைப்பு செயல்பாட்டை நீட்டிக்க வேண்டும். இதற்கு சட்டசபையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட

வேண்டும். இதனைத் தொடர்ந்து 27 மாவட்டங்களுக்கும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா என முதல்வர் ஆலோசித்து வருகிறார்... பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்து விட்டால் டிசம்பரிலேயே தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு உள்ளாட்சி தேர்தலை நடத்த முற்படும் போது 2026ல் பதவி காலம் முடியும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளைக் கலைத்து விட்டு டிசம்பர் தேர்தலோடு நடத்தப்படலாம். அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத் தொடரில் இது தொடர்பான மசோதா கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்