கடன் பிரச்சினை - மகளுடன் சேர்ந்து தாய் த*கொலை

x

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், கணவர் இறந்த பின் கடன் பிரச்சினையில் சிக்கிய தாய், தன் மகளுடன் சேர்ந்து த*கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் குகநாதன். இவருக்கு கற்பகம் என்பவருடன் திருமணமாகி, 17 வயதில் சுபிக்‌ஷா என்ற மகள் இருந்தார். இந்நிலையில், எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குகநாதன் தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே ரயில் முன் பாய்ந்து குகநாதன் த*கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடனை வசூல் செய்யும் பொருட்டு, குகநாதனின் மனைவிக்கும், அவரது மகளுக்கும் நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கற்பகம், தன் 17 வயது மகளுடன் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்