ரேப் கேஸ் கொடுத்த லிவிங் பார்ட்னர்.. முன்பே கணித்து ஆண் வைத்திருந்த `அஸ்திரம்’ - அசந்துபோன நீதிபதி

x

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதற்கான ஒப்பந்த பத்திரத்தை தாக்கல் செய்த அரசு ஊழியருக்கு வல்லுறவு வழக்கில் மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கணவரை விவாகரத்து செய்து விட்டு மகனுடன் வசித்து வந்தார்.

அவருக்கு 46 வயது அரசு ஊழியருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் 'லிவிங் டு கெதர்' முறையில் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண் அரசு ஊழியர் மீது போலீசில் வல்லுறவு புகார் அளித்தார்.

இதையடுத்து அரசு ஊழியர், வல்லுறவு வழக்கில் முன்ஜாமீன் கோரி மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையின் போது லிவிங் டு கெதர் ஒப்பந்த பத்திரத்தை அரசு ஊழியர் தாக்கல் செய்தார்.

அந்த ஒப்பந்தத்தில் நிபந்தனையாக சேர்ந்து வாழும் காலத்தில் ஒருவர் மீது ஒருவர் பாலியல் புகார் எதுவும் அளிக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல சேர்ந்து வாழும் போது பெண் கர்ப்பமானால் ஆண் பொறுப்பல்ல போன்ற நிபந்தனைகளும் இடம்பெற்று இருந்தன.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, நிபந்தனைகளைப் பார்த்து வியப்படைந்ததுடன், ஒப்பந்த பத்திரத்தின் அடிப்படையில் அரசு ஊழியருக்கு வல்லுறவு வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்