"மது விற்பனை நேரம்" உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

மது விற்பனை நேரத்தை குறைப்பதை அமல்படுத்தாதது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மது பழக்கத்தால் இளைய சமுதாயம் பாதிக்கப்படுவதாக‌க் கூறி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த‌து. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை குறைத்து அரசு அறிவிக்கவேண்டும் என்றும், இதை மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால், இந்த உத்தரவை எட்டு மாத காலமாக அமல்படுத்தாத‌தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி. பரதசக்கரவர்த்தி அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்