வாழ்க்கையின் உயிர்நாடி.. உடனே இதை செய்யுங்க.. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
மழை வெள்ள பாதிப்புகளால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் இன்றும், சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் நாளையும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு, தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிக்கப்படும் என்றும், சிறப்பு முகாம்களில் பொதுமக்களின் வசதிக்கென இ-சேவை மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story