எல்.ஐ.சி தென்மண்டல அலுவலகத்தில் கோலாகலமாக சுதந்திர தின கொண்டாட்டம் | Thanthitv

x

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடத்தில், எல்.ஐ.சி தென்மண்டல மேலாளர் ஜி.வெங்கட்ரமணன் தேசியக் கொடியை ஏற்றினார். பின்பு பேசிய அவர், வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு இறப்புரிமை தொகையை முதலில் வழங்கியது எல்ஐசி தான் என்று தெரிவித்தார். எல்.ஐ.சி டிஜிட்டல் செயலி, டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், யூபிஐ, கியூஆர் கோடு உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகள் வழியாக, வாடிக்கையாளர்கள் பிரிமீயம் செலுத்தலாம் என்றும் தெரிவித்தார். மேலும் சமூக அக்கறையுடன் தமிழகம், கேரளாவில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும், அடையாறு கேன்சர் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்து ஏழை நோயாளிகளுக்கு நிதியுதவி செய்யப்படுவதாகவும் ஜி.வெங்கட்ரமணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்