டிஜிபி அலுவலகத்திற்கு பறந்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் கடிதம் | ED

x

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யகோரி, காவல்துறை தலைமை இயக்குனருக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை, அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட சம்பவத்தில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டனர். அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அமலாக்கத்துறையின் பதிவுகளை திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் எடுத்துச் சென்ற சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, ஏற்கனவே, டிஜிபி அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியிருந்தனர். அதன் பிறகு, எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்கிற தகவலை அமலாக்கத்துறை அதிகாரியிடம் கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை அடிப்படையாகக் கொண்டு, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என 2வது முறையாக டிஜிபி அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்