"எங்கதான் போறீங்க எல்லோரும்.." ஒரே நேரத்தில் படையெடுத்த மக்கள்.. ஸ்தம்பித்து நிற்கும் வாகனங்கள்
"எங்கதான் போறீங்க எல்லோரும்.." ஒரே நேரத்தில் படையெடுத்த மக்கள்.. ஸ்தம்பித்து நிற்கும் வாகனங்கள்
தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகையால் கொடைக்கானலில் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்களில் காத்திருந்து, ஊர்ந்து சென்றபடி சுற்றுலாத்தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
இதே போல், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே
ஆழியார் கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள்
குவிந்தனர். இதனால்
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொள்கின்றனர்.
இதனால் ஏற்காடு மலை பாதை அண்ணா பூங்கா சாலை மற்றும் படகு இல்ல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல், விடுமுறை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு அருகில் உள்ள முருகர் மற்றும் பெருமாள் கோவில்கள் உள்ளவர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.