சட்ட கல்லூரிகளில் கூடுதல் அட்மிஷன்.. அமைச்சர் அறிவிப்பு

x

தமிழகத்தில் உள்ள 6 அரசு சட்டக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் கூடுதலாக 480 மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நீதி நிர்வாகம் மற்றும் சட்டத்துறை மீதான விவாதத்திற்கு பின் அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம், தேனி ஆகிய அரசு சட்டக் கல்லூரிகளில் 2024-2025 கல்வியாண்டில் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்புகளில், முதலாமாண்டு சேர்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 80ல் இருந்து 120 ஆக அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதன்மூலம், மொத்தம் 480 மாணவர்கள் அரசு சட்டக் கல்லூரிகளில் கூடுதலாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். பட்டறைப்பெரும்புதூரில் செயல்பட்டு வரும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் புதிதாக 5 ஆண்டு சட்டப் படிப்பும், புதுப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் புதிதாக 3 ஆண்டு சட்டப் படிப்பும் தொடங்கப்படும் என ரகுபதி அறிவித்தார்.

Uploaded On 25.06.2024


Next Story

மேலும் செய்திகள்