சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரம் - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

மாஸ்க் அணியாமல் சென்றதாக கூறி, சட்டக்கல்லூரி மாணவரை லாக் அப்பில் அடைத்து தாக்கிய விவகாரத்தில், காவல் துறையினருக்கு எதிரான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம், கடந்த 2022ம் ஆண்டு இரவில் சைக்கிளில் வீடு திரும்பிய போது, முகக்கவசம் அணியாததற்கு ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை செலுத்த மறுத்ததால், போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று லாக் அப்பில் அடைத்து தாக்கியுள்ளனர். இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் 3 மாதங்களில் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், அப்துல் ரஹீம் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து, விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்