ஊட்டி சாலையில் மண் சரிவு அபாயம்! அதிகாரிகள் மெத்தனம்?

x

ஊட்டி தொட்டபெட்டா சாலையில் உள்ள செங்குத்தான பகுதியில், விடுதி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அகற்றப்படுவதால், ஊட்டி - தொட்டபெட்டா சாலையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், மண் அரிப்பு காரணமாக, கனமழை நேரங்களில் கோடபமந்த் கால்வாயில் சேரும் சகதியுமாக தண்ணீர் ஓடுவதால், ஊட்டிக்குள் வெள்ளம் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, விடுதி கட்டுமான பணிக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்