கனமழையால் மொத்தமாக மூழ்கிப்போன தரைப்பாலம்..10 கி.மீ. தூரம் சுற்றிச்செல்லும் வாகன ஓட்டிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், அப்பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் செல்ல முடியாமல், கெரிகேப்பள்ளி தரைப்பாலம் வழியாக சுமாா் பத்து கிலோ மீட்டா் தூரம் வாகன ஓட்டிகள் சுற்றிச் செல்கின்றனர். மேலும் தண்ணீரை கடக்கும் வாகனங்கள் பழுதாகி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். பெங்களூரு செல்லும் பிரதான சாலை என்பதால், தரைப்பாலத்தில் உள்ள நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story