`லால் சலாம்' சர்ச்சை.. தன் பாணியில் சைலண்ட் பதிலடி தந்த AR ரகுமான்
'லால் சலாம்' பட பாடல் குறித்து எழுந்த சர்ச்சைக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகிவரும் 'லால் சலாம்' படத்தில் "திமிறி எழுடா..." என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த பின்னணி பாடகர்கள் ஷாகுல் அமீது, பாம்பே பாக்யா ஆகியோர் பாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அவர்களின் குடும்பத்தாரிடம் உரிய அனுமதி பெறப்பட்டதாகவும், அதற்கான சம்பளமும் தரப்பட்டதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் ஆபத்து இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்
Next Story