சனி பெயர்ச்சி முடிந்த 6வது சனியில் மொத்தமாக மாறிய திருநள்ளாறு-குவிந்த பலலட்சம் பக்தர்கள்..
ஞானவாபி மசூதி குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வாரணாசி நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது. இதனை, அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி, தொல்லியல் துறையின் ஆய்வு அறிக்கை, சீலிட்ட கவரில், வாரணாசி நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அறிக்கையானது, இந்து மற்றும் முஸ்லீம் தரப்புக்கு வழங்கப்பட்டு, பதில் மனு கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் மிகப்பெரிய இந்து கோயில் இருந்ததாகவும், அந்த கோயிலின் தூண்களில் சிறிது மாற்றம் செய்து, மசூதி எழுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஞானவாபி வளாகத்தின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர், ஏற்கனவே இருந்த ஹிந்து கோவிலின் ஒரு பகுதி என்றும், கோயிலில் இருந்த சிலைகள், மசூதிக்கு அடியில் புதைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது