குத்துவிளக்கை திருட மாஸ்டர் பிளான்...- அப்பாச்சி 180-யை பறிகொடுத்த பாய்ஸ்.. - “என்னா அடி..“
கழுத்தில் மைனர் செயினோடு, மண்டி இட்டு உட்கார்ந்திருக்கும் இந்த நபர் தான், திருட்டு பிளான் சொதப்பியதால் சிக்கி சின்னாபின்னமான கொள்ளையர்...
'' நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்... ஏன் நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது '' என்ற மைண்ட் வாய்ஸோடு உட்கார்ந்திருக்கும் இவர்கள் ஏற்காட்டைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் விஜய். சம்பவம் நடந்த அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள சோமம் பட்டி வண்ணாத்திக்குட்டை பகுதியில் இருந்த வீடுகளை நோட்டமிட்ட இருவரும், இறுதியாக இந்த வீட்டை குறி வைத்திருக்கிறார்கள்..
கொள்ளை முயற்சி நடந்த இந்த வீடு, நடேசன் என்ற விவசாயிக்கு சொந்தமானது. சில நாட்களுக்கு முன் நடேசனுக்கு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு ஏற்படவே சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கபட்டிருந்திருக்கிறார்.
இதனால் வீட்டில் யாருமில்லை.இந்த நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று ராத்திரி அந்த வீட்டில் திருடுவது என கருணாகரனும் விஜயும் நாள் குறித்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களது கெட்ட நேரம், வீட்டு ஓனர் டிஜார்ஸ் ஆவதற்கு மருத்துவர்கள் கொடுத்த தேதியும் அது தான்.
சம்பவத்தன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணி என்பவர் தனது காரில் சென்று , நடேசனை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்திருக்கிறார்.
ஆனால் இது தெரியாத திருடர்கள் இருவரும் நல்ல போதையில், கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கிடைத்த அனைத்தையும் மூட்டை கட்டியிருக்கிறார்கள்.
அப்போது திடீரென நடேசன் காரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்துச் சந்தேகமடைந்த பக்கத்துவீட்டுக்காரர்
உள்ளே சென்று பார்க்கவே , திடீரென வெளியே எகிறிக் குதித்து வந்த திருடர்கள் இருவரும் அவரது தலையில் இரும்பு ராடால் தாக்கிவிட்டுத் தப்பித்து ஓடி இருக்கிறார்கள்.
ஆனால் அதற்குள் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ஒருவனை மட்டும் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள்.
கையில் சிக்கிய திருடனை நையப்புடைத்த பொதுமக்கள், அவர்கள் வந்த பைக்கையும் சுக்கு நூறாக நொறுக்கி இருக்கிறார்கள்.
அதே நேரம் தப்பித்து ஓடிய மற்றொரு திருடனையும் மடக்கி பிடித்த மக்கள் இருவரையும் காவல் நிலையத்தில்
ஒப்படைத்திருக்கிறார்கள்.
மண்டை உடைபட்டு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கையும் இழந்த இந்த திருடர்கள், வீட்டிற்குள் அவ்வளவு நேரமாகா திருடிக்கொண்டிருந்தது இந்த ஒற்றை குத்து விளக்கைத் தானாம்,
இந்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதே போல வேறு ஏதாவது திருட்டு சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்களா என விசாரித்து வருகிறார்கள்.