ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு..அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்..

x

கும்பகோணம் மாநகராட்சியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த பணிகள் முடியாத நிலையில், யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், குளங்கள் மற்றும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்போது மும்முரமாக தொடங்கியுள்ளது.

காவிரி கரையில் வீடுகளை இடிக்க வந்த போது அங்கு பொதுமக்களுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட முயன்ற சிலரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்