காஞ்சிபுரம் கோயில் கும்பாபிஷேகம் - குடும்பத்தோடு நடிகை ரோஜா சாமி தரிசனம்

x

கும்பகோணம் அருகே, மணஞ்சேரியில் உள்ள மகாகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கலசத்திற்கு ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் கோனூரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி வேங்கடசே பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்த கோவிந்தா என விண் அதிர பக்தி பரவசத்துடன் கூறினர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜாவின் குலதெய்வமான இந்த கோயிலில், அவர் குடும்பத்தினருடன் பங்கேற்று தரிசனம் செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேள்விமங்கலம் முனீஸ்வரர், பிள்ளையார் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல், வயலூர் கிராமத்தில் அங்காளம்மன் கோவிலுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்