அடேங்கப்பா இத்தன கிலோவா? - தமிழகத்தில் இருந்து கடல் கடந்து செல்லும் முருகனின் பிரமாண்ட வேல்
அடேங்கப்பா இத்தன கிலோவா? - தமிழகத்தில் இருந்து கடல் கடந்து செல்லும் முருகனின் பிரமாண்ட வேல்
கும்பகோணத்தின் நாச்சியார்கோயிலில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட வெண்கல வேல் ஒன்று மலேசியாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தனியார் சிற்பக்கூடத்தை சேர்ந்த 15 ஊழியர்கள் இணைந்து, கடந்த ஓராண்டு காலமாக பணி செய்து வெண்கல வேல் தயாரித்துள்ளனர். 175 கிலோ எடையில் 15 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட வேல், வர்ணம் தீட்டி பொருத்தப்பட்டது. மலேசியாவின் கிலாங் நகரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி கோவிலுக்கு இந்த வேல் கொண்டு செல்லப்படுகிறது.
Next Story