அரசு பஸ் கண்டக்டர் மீது கொடூர தாக்குதல் - தீயாய் பரவும் காட்சிகள்
அரசு பஸ் கண்டக்டர் மீது கொடூர தாக்குதல் - தீயாய் பரவும் காட்சிகள்
கும்பகோணத்தில் இருந்து குடவாசல் சென்ற அரசு பேருந்து ஒன்றில் சிலர் கெட்ட வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டுக் கொண்டே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாத்தூர் பகுதியில் சென்ற போது நடத்துநரை கெட்ட வார்த்தைகளால் திட்டி சிலர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அந்த தாக்குதல் காட்சியை ஒருவர் செல்போனில் படம் எடுக்க ,அது தற்போது வைரலாகி வருகிறது. தாக்குதல் சம்பவம் குறித்து நடத்துநர் கார்த்திகேயன் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின், தாக்குதல் நடத்திய மூன்று பேரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story