பிஞ்சின் உயிரை எடுத்த `சித்திரை'... ஊர் பேச்சால் முடிந்த கதை - பகீர் சம்பவம்

x

கும்பகோணத்தை சேர்ந்த தம்பதி பாலமுருகன் -சங்கீதா. தம்பதிக்கு கடந்த 38 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையுடன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டைக்கு சங்கீதா சென்ற நிலையில், அங்கு கடந்த 14 ஆம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடிப்பட்டு குழந்தை சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. சங்கீதாவின் தந்தையும், குழந்தையின் தாத்தாவுமான வீரமுத்துவே குழந்தையை கொன்றிருக்கிறார். பேரன் சித்திரை மாதத்தில் பிறந்ததால்... தாய் மற்றும் தந்தையின் குடும்பத்தினருக்கு ஆபத்து நேரிடும் எனவும், இரு வீட்டாரும் எதிர்காலத்தில் கடன் பிரச்சினையில் சிக்க நேரிடும் எனவும் ஊரார் பயமுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், பேரனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றதாக வீரமுத்து வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்