"3 நதிகளின் புனித நீர் யானை மீது ஊர்வலம்"...தஞ்சையில் குடமுழுக்கு கோலாகலம்
திருபுவனம் கம்ப கரேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கிற்காக 3 நதிகளிலிருந்து எடுக்கப்பட்ட புனித நீர், யானைகள் மீது ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. தஞ்சை மாவட்டம் திருபுவனத்திலுள்ள கம்ப கரேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு, வரும் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக காவிரி, கங்கை, தலை காவிரி ஆகிய நதிகளிலிருந்து எடுக்கப்பட்ட புனித நீரானது, யானைகள் மீது வைத்து கம்ப கரேஸ்வர சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இந்த ஊர்வலத்திற்கு தருமபுரம் ஆதீனம் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story