பொங்கி எழும் நீர்.. - தாமிரபரணி கரையோர பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை

x

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் நிரம்பியுள்ளன. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோதையாறு, தாமிரபரணி மற்றும் பரளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில்

வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

விடுக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்