பருப்பு வடையில் செத்த எலி.. பெட்டியோடு தூக்கி சென்ற ஊழியர்கள்.. கரூர் அருகே பரபரப்பு
கரூர் மாவட்டம், குளித்தலையில் தேநீர் கடையில் விற்பனை செய்யப்பட்ட வடையில் எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கடம்பர் கோயில் அருகே பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தேநீர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கார்த்தி என்பவர் பருப்பு வடை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது, வடையில் எலி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்தி, இதுதொடர்பாக கடையின் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார். எனினும், கடையின் உரிமையாளர் முறையாக பதிலளிக்காததால், சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட கார்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story