"குதிச்சிர்ரா கைப்புள்ள .." - போதையில் கிணற்றிற்குள் குதித்த ஆசாமி
கன்னியாகுமரி ஈஞ்சக்கோடு குளச்சவிளாகம் பகுதியை சேர்ந்த மதுபோதைக்கு அடிமையான கூலித் தொழிலாளி வீட்டு வளாகத்தில் இருந்த 40 அடி ஆழ கிணற்றிற்குள் குதித்துள்ளார்... ராஜேஷ் என்ற அந்த 23 வயது இளைஞரைக் காப்பாற்ற அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கிணற்றிற்குள் இறங்கி மீட்க முயன்ற நிலையில், முயற்சி தோல்வி அடைந்தது... இருவருமே கிணற்றினுள் சிக்கிக் கொள்ள உடனடியாக தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்... மணிகண்டனை மீட்ட தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்த ராஜேஷை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Next Story