தண்ணீர் தொட்டியில் மரண ஓலம்.. சடலமாய் மிதந்த பிஞ்சு உயிர் - கிருஷ்ணகிரியில் பயங்கரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊத்தங்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுனர் சிவக்குமார். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு, 3 குழந்தைகள் உள்ள நிலையில், ஒன்றரை வயது குழந்தையான மகாதேவன் வீட்டின் வாசலி விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது, தண்ணீர் பிடிக்க பவித்ரா சென்ற நிலையில், குழந்தையை கவனிக்காமல் விட்டதாக கூறப்படுகிறது. பின்னர், குழந்தையை காணவில்லை என தேடி அலைந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள சுரேஷ் என்பவரின் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து, குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர், தகவலறிந்து வந்து குழந்தையின் உடலை மீட்ட போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story