வடமாநில பெண் உருட்டிய உருட்டில்..மொத்தமாக ஆடிப்போன கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை விற்பனைக்கு கொண்டு சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.சூளகிரி பேருந்து நிலையம் அருகே ரகுராம் என்பவர் ஆன்லைன் டிக்கெட் பதிவு மையத்தை நடத்தி வருவதுடன், நகை அடகுக் கடையும் வைத்துள்ளார். இவரது கடைக்கு, வடமாநிலத்தைச் சேர்ந்த கிஷோர், மீனா, ராஜ் ஆகிய மூவர் வந்துள்ளனர். ரகுராமிடம், கால் பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியை கொடுத்து, இதுபோல் தங்களிடம் ஏராளமான நகைகள் இருப்பதாகவும், குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த தங்கச்சங்கிலியை சோதித்தபோது, தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில், வடமாநிலத்தவர் மூவரிடம் போலீசாரிடம் விசாரித்தனர். மேலும் 2 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை வைத்து, அவர்கள் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, பெண் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.