தந்தையை VAO ஆபீஸ் வாசலிலேயே வெட்டிக் கொன்று பழிதீர்த்த மகன்ரத்த வெள்ளத்தில் துடித்த சகோதரி சொந்த ரத்தமே எமனாய் மாறிய அந்த ஒரு நொடி

x

வி.ஏ.ஓ அலுவலகம் வந்த தந்தையையும், சகோதரியையும்... அலுவலக வாசலில் வைத்து வெட்டிக் கொன்ற சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அதிரச் செய்திருக்கிறது...

பெற்ற மகன், உடன் பிறந்த சகோதரனால் துடிதுடிக்க வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கின்றன இந்த இரு உயிர்களும்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில்தான் இந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது..

அனுபவச் சான்று வாங்க வந்த, தன் சகோதரி மனவள்ளியையும், முதியவரான தந்தை வரதனையும், 58 வயதான லவகிருஷ்ணன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருக்கிறார்... ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்குமிடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது..

வரதனுக்கு இரண்டரை ஏக்கர் நிலமுள்ள நிலையில், அதில் அவரின் பிள்ளைகளான மனவள்ளிக்கும், லவகிருஷ்ணனுக்கும் பங்கு இருந்திருக்கிறது..

இதில், மூவருக்குமிடையே சொத்து தகராறு ஏற்பட்டு வழக்கு நீதிமன்றம் சென்ற நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் தான் தந்தை, மகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது..

இதனால் ஆத்திரத்தில் இருந்த லவ கிருஷ்ணன், நிலத்திற்கான அனுபவ சான்று பெற வீ.ஏ.ஓ அலுவலகம் வந்த இருவரையும் கொன்று பழிதீர்த்திருக்கிறார்....

தொடர்ந்து, அவரே போலீசில் சரணடைந்த நிலையில், லவ கிருஷ்ணனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்