மிரளவிடும் அரசு பள்ளி... அட்மிஷனுக்கு பெற்றோர் போட்டா போட்டி- தெறிக்க விடும் மாணவர்கள்
கடைக்கோடி கிராமத்தில், சாமன்ய மக்களுக்காக செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் இயங்கி வருகிறது. அப்பள்ளியின் சிறப்பை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெரிகேப்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி...
மாணவர்களுக்காக காமராஜர் பெயரில் பள்ளிக்குள் ஒரு அரங்கம், மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வண்ணமயமான வகுப்பறைகள், தனி நூலகம், கணினி வகுப்புகள் மூலம் கணினித்தமிழ் அறிவு கற்பித்தல்... என இந்த கெரிகேப்பள்ளி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடகப்பள்ளி தனியார் பள்ளிகளுக்கே சவால் விடுகிறது...
இதனுடன், கையெழுத்து பயிற்சி, இசை, நடனம், விளையாட்டு, சிலம்பம், அபாகஸ் என பண்முகங்களுடன் செயல்படும் இப்பள்ளியில் மாணவர்களை இன்முகங்களுடன் மட்டுமே காண முடியும் என்கிறார் பெற்றோர் ஒருவர்...
தொலைநோக்கின் உச்சகட்டம்... கற்பதை விட கண்ணால் கண்டு, அதனை உணர்ந்து அரிய வேண்டும் என மாணவர்களுக்கு இப்பள்ளி கொடுக்கும் கல்வியால் உள்ளம் நெகிழ்கிறது என்கிறார் இவர்...
இதனிடயே, தன் பள்ளியின் சிறப்பை சிறுமி ஒருவர் ஆங்கிலத்தில் விளக்கி கூறியது வியப்பில் ஆழ்த்தியது...
அன்பாசிரியர் விருது, மாநில எழுத்தறிவு விருது, சிறந்த பள்ளி மேலாண்மைக் குழு விருது, கல்வி வள்ளல் காமராசர் விருது, கிரீன் சாம்பியன் விருது, மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப் பள்ளிக்கான விருது, பசுமை முதன்மையாளர் விருது,
மாநில நல்லாசிரியர் விருது என அத்தனை விருதுகளையும் இந்த பள்ளி முத்தமிட்டிருக்கிறது...
பள்ளி தலைமையாசிரியர் வீரமணி முன்னெடுப்பில்.. கல்வித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளுடனும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளால், கடந்த 5 ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை 28-லிருந்து 63-ஆக உயர்ந்திருப்பதாக மனம் நெகிழ்ந்து ஆசுவாசம் கொள்கின்றனர் பகுதிவாசிகள்...