5 மணி நேரம் விடாமல் கொட்டிய மழை.. நிரம்பிய ஏரி, குளங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. தீர்த்தம், குருபரப்பள்ளி, நேரலகிரி, குந்தாரப்பள்ளி, மாதேப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Next Story